கேரளத்தை உறையவைத்த குரூர ‘குருப்’- 37 ஆண்டுகளாகத் தொடரும் மர்மம்!


எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

1984-ம் ஆண்டு. கேரள மாநிலம் மேவேலிக்கரா காவல் நிலையம். அன்றைய தினம் ஆசுவாசமாய் அமர்ந்திருந்த டிஎஸ்பி-யான ஹரிதாஸ், பல்வேறு தேவைகளுக்காகக் காவல் நிலையத்தில் காத்திருந்த நபர்களைப் பார்வையால் துழாவிக்கொண்டிருந்தார். அவர்களில் இருப்புக்கொள்ளாத ஒரு நபரின் உடலசைவுகள் ஹரிதாஸின் போலீஸ் மூளையைச் சீண்டின. அந்த நபர், தான் அணிந்திருந்த முழுக்கைச் சட்டையின் கையை அவஸ்தையாய் இழுத்து விட்டுக் கொண்டிருந்தார். பொறுமையிழந்த ஹரிதாஸ் அவரை நெருங்கி, “சட்டையைக் கழற்று!” என்றார். பாஸ்கர பிள்ளை என்ற அந்த நபர் மிரட்சியுடன் சட்டையைக் கழற்றிய தருணத்தில், கேரளத்தை மட்டுமல்ல நாட்டையே உலுக்கப்போகும் பிரபல குற்ற வழக்கின் மர்மக் கதவு லேசாகத் திறந்தது.

இதோ, 37 வருடங்களுக்குப் பின்னரும் இறுதிக்கட்டத்தை நெருங்காத வழக்காக இன்றும் தொடர்கிறது இந்த வழக்கு. கேரளப் போலீஸ் தொடங்கி இன்டர்போல் வரை தேடிச் சலித்திருக்கிறார்கள். தன்னையே திட்டமிட்டுக் கொன்ற(!) விநோதமான குற்றச்சாட்டின் பேரில் தேடப்படும் குற்றவாளியாக இன்றுவரை நீடிக்கிறார் சுகுமார குருப்!

காப்பீடு தொகைக்காக ஒரு கொலை

x