சமயம் வளர்த்த சான்றோர் 18: சதாசிவ பிரம்மேந்திரர்


கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

திருமூலர் கடைபிடித்த கடினமான சித்த யோக மார்க்கத்தின் வழிமுறைகளை தீவிரமாகப் பின்பற்றியவர் நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர். ஏராளமான பாடல்கள், நூல்கள் மூலம் வாழ்வியல் தத்துவங்களையும் ஆன்ம ஞானத்தையும் பலருக்கு போதித்துள்ளார். அவை இன்றும் அனைவராலும் போற்றப்படுகின்றன.  

17-18-ம் நூற்றாண்டில் தெலுங்கு பிராமணர் குலத்தில் மதுரையில் அவதரித்தவர் சதாசிவ பிரம்மேந்திரர். தந்தை பண்டிதர் சோமசுந்தர அவதானி. தாயார் பார்வதி அம்மாள். இவரது இயற்பெயர் சிவராம கிருஷ்ணன்.  

சிறுவயது முதலே நல்ல அறிவாற்றல் பெற்று விளங்கினார் சிவராம கிருஷ்ணன். சம்ஸ்கிருத மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றதோடு மட்டுமல்லாமல் வேதாந்த சித்தாந்த கோட்பாடுகளையும் கற்றார். பரமசிவேந்திராள், வேங்கடேச அய்யர் ஆகியோரிடம் முறையாக சாஸ்திரங்களையும் கற்றார்.  

x