வேர்களுக்குத் திரும்புவோம்... வெயிலை வெல்வோம்!- வேனலுக்கு மருத்துவர் வேணி தரும் யோசனைகள்


தி.ஞானபாலன்
gnanabalan.t@hindutamil.co.in

“சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்…”

- இப்படி ஒரு அறிவிப்பு, தேர்தல் பரபரப்புக்கிடையில் இருந்த தமிழக மக்களைச் சற்றே கலவரப்படுத்தியது. ஏப்ரல் 2-ல் அதிகபட்சமாக வேலூரில் 109.2 டிகிரி அளவுக்குக் கொளுத்தியதைக் கண்டதும் மக்கள் அனிச்ச மலரைப்போல் வாடித்தான் போனார்கள்.

வழக்கமாகச் சித்திரை மாதத்தின் மத்தியில் அதாவது, மே மாதத் தொடக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, பின் அக்னி நட்சத்திர நாட்களில் அதிகபட்சத்தைத் தொடும் வெயில், வழக்கத்தை மீறி இப்படி முன்கூட்டியே வாட்டியெடுத்துக் கொண்டிருக்கிறது.

x