பந்தாடப்படும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்!- தேர்வு விஷயத்தில் தெளிவற்ற நிலையில் அரசு


ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. இந்நிலையில், ‘மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும். மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் மாணவர்கள் தேர்வு எழுதலாம். விருப்பமில்லாத மாணவர்கள் குறைந்தபட்சமாக 35 மதிப்பெண்களுடன் தேர்ச்சி செய்யப்படுவர்’ என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியானது. இதனால் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கும் குழப்பத்துக்கும் ஆளாகினர். ஆனால்,  “அப்படியான அறிவிப்பை அரசு வெளியிடவில்லை” என்று விளக்கம் அளித்திருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்புகள் தொடர்பாகக் கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது இப்படி சர்ச்சை எழுவது வழக்கமாகிவிட்டது. இது குறித்து ஆசிரியர்கள் மற்றும் கல்வி செயற்பாட்டாளர்களுடன் பேசினோம்.

கண்டிக்கத்தக்கது

x