புறவாசல் வழியாக வரும் ஸ்டெர்லைட்..!- மீண்டும் யுத்த பூமியாகிவிடுமா தூத்துக்குடி?


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவிவரும் சூழலில், மூச்சுத்திணறலில் தவிக்கும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாமல் அரசுகள் அல்லாடுகின்றன. மணிக்கொரு துயரக் கதைகள் தொடரும் இந்தச் சூழலில், தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட்  பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கிறது.

பொதுமக்களின் தொடர் போராட்டங்களினால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கும் நிலையில், ஆலையைத் திறந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறது வேதாந்தா நிறுவனம். ஆக்சிஜன் தயாரிக்க வேதாந்தாவுக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், இதுகுறித்த கருத்துக்கேட்புக் கூட்டம் தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் ஏப்ரல் 23-ல் நடந்தது. அப்போது நடந்த சம்பவங்கள் மேலும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.

பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை

x