சமத்துவத்தை விதைக்கும் கர்ணன்- கொடியங்குளம் கொடுமைகளை நினைவுகூரும் சி. மகேந்திரன்


ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் ‘கர்ணன்’ படம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. படத்தில் பேசப்பட்ட சாதிய அரசியல், உருவக நயமுடன் கூடிய தொன்மக் குறியீடுகள் உள்ளிட்டவை பேசுபொருளாகியிருக்கின்றன.

சிலர், ‘பஸ் வசதி இல்லாததெல்லாம் ஒரு பிரச்சினையா?’ என்று கேள்வி எழுப்புவதையும் பார்க்க முடிகிறது. மறுமுனையில், பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு பேருந்து வசதி மறுக்கப்பட்டதற்கு பின்னால் உறைந்துகிடந்த சாதியம் குறித்தான தங்கள் நினைவலைகளை சமூக ஊடகங்களில் பலர் பதிவிட்டுள்ளனர். தஞ்சை ஜூபிடர் திரையரங்கில் ‘கர்ணன்’ படத்தைப் பார்த்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சி.மகேந்திரன், ‘கர்ணன் மிகப் பிரம்மாண்டமாக என் மனவுணர்வுகளில் கலந்தெழுந்து நின்றுவிட்டான்’ என்று பதிவிட்டிருக்கிறார். மகேந்திரனின் உள்ளக்கிடங்கில் தேங்கிக் கிடக்கும் நினைவலைகளை மீட்டெடுக்க அவருடன் உரையாடினேன்.

ஆதிக்க உணர்வும், மனமாற்றமும்

x