கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in
சமத்துவம், சகோதரத்துவம், நற்குணம், ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவம் வாய்ந்த ஆன்மிக, சமூக, அரசியல் தளத்தை உருவாக்கி அனைத்து மதத்தினரும் ஒருவருக்கொருவர் அன்புடன் இருக்க வேண்டும். நேர்மையாக வாழ வேண்டும் என்று வலியுறுத்திய சீக்கிய மகான் குருநானக்.
மக்களிடையே தீண்டாமை, மூட நம்பிக்கை போன்றவை தீவிரமாக இருந்த காலம் அது. மனிதர்கள் மத்தியில் சாதி, மதம் என்ற பிரிவினைகள் தோன்றி, அவர்களது ஒற்றுமை உருக்குலைந்தது. அப்போது குருநானக் போன்ற மகான்கள் தோன்றி, மக்கள் மத்தியில் ஆனந்தம், சாந்தி, அன்பு, கருணை முதலியவற்றை உள்நாடு, வெளிநாடுகளிலும் உபதேசம் செய்து அவர்கள் சிறப்புடன் வாழ வழி செய்தனர்.
பாகிஸ்தானில் லாகூருக்கு அருகில் 35 மைல் தூரத்தில் உள்ளது ‘ராயி கோயி தல்வந்தி’ (இப்போது ‘நான்கானா சாஹிப்’ என்று அழைக்கப்படுகிறது) என்ற கிராமம். அங்கு சத்சிரி என்ற சாதிப் பிரிவைச் சேர்ந்த மேத்தா காலு – திருப்தா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 1469-ம் ஆண்டு நானக் மகனாகப் பிறந்தார்.