ஐநாவில் அங்கீகாரம் பெற்றுத்தந்த இந்தியா- சிகரம் தொடுமா சிறுதானிய உற்பத்தி?


ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

“விவசாயிகளின் வருமானத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் உத்தரவாதம் அளித்து, வறுமை ஒழிப்புக்கு வழிவகுத்து, உணவுப் பாதுகாப்புக்கு உதவி, பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் வறட்சி மிகுந்த பகுதிகளிலும் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்ட கைகொடுக்கக்கூடியது சிறுதானிய வேளாண்மை. அப்படிப்பட்ட சிறுதானியங்களின் உற்பத்தி அநேக நாடுகளில் அருகிவருகிறது. ஊட்டச்சத்து மற்றும் சூழலியல் பாதுகாப்பில் சிறுதானியங்களின் அபாரமான பங்கை வாடிக்கையாளர்கள், விவசாயிகள், தீர்மானிக்கும் சக்திகள் உள்ளிட்ட அனைவரும் உடனடியாக உணரச் செய்ய வேண்டும்” - அண்மையில் ஐநா சபையில் இப்படி உரையாற்றினார் ஐநா-வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி. அப்படிப் பேசிய கையோடு, இந்தியப் பாரம்பரிய சிற்றுண்டியான கைமுறுக்கையும் சபையில் கூடியிருந்த ஐநா உறுப்பினர்களுக்கு இன்முகத்துடன் அவர் விநியோகித்தது சுவையான செய்தி!

ஆரோக்கியம் மற்றும் சூழலியல் அடிப்படையில் உலகம் முழுவதும் சிறுதானியங்களின் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும் என 2023-ம் ஆண்டைச் சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்திருக்கிறது ஐநா சபை. இந்த அறிவிப்பு வெளிவர முதன்மைக் காரணம் நம் நாடுதான் என்று பெருமை கொள்ளலாம். வங்கதேசம், கென்யா, நேபாளம், நைஜீரியா, ரஷ்யா, செனகல் ஆகிய நாடுகளுடன் இணைந்து ‘சிறுதானியங்களின் சர்வதேச ஆண்டு 2023’ என்ற கருத்தாக்கத்தை, ஐநா சபையில் இந்தியா முன்வைத்தது. இந்நாடுகளுடன் மேலும் 70 உலக நாடுகள் கைகோக்கவே, 2023-ம் ஆண்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறது ஐநா.

இந்நிலையில், சிறுதானியங்கள் உற்பத்தியில் தமிழகத்தின் இன்றைய நிலை குறித்தும் எதிர்காலம் குறித்தும் விவசாயிகளுடனும் வேளாண் விஞ்ஞானிகளுடனும் ‘காமதேனு’வுக்காக உரையாடினோம்.

x