வெற்றியை யாருக்குத் தீர்மானித்திருக்கிறார்கள்?- வாக்குறுதிகளும்... வாக்குப் பதிவுகளும்!


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்ட பின்னரும் தமிழகத்தில் அரசியல் புயல் ஓய்ந்துவிடவில்லை. மே 2-ல் தேர்தல் முடிவுகள் தெரியவரும் கணம்வரை, அரசியல் நகர்வுகள் ஒவ்வொன்றும் கவனம் பெறுகின்றன; அலசப்படுகின்றன. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளைப் பகுப்பாய்ந்து பார்க்கும்போது பல்வேறு சுவாரசியங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்கள் தென்படுகின்றன. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை மே 2-ல் பார்த்துக்கொள்ளலாம். அதுவரை, வாக்குப்பதிவு விவரங்களை வைத்து ஓர் அலசலை மேற்கொள்ளலாம்.

இந்தத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 72.81 சதவீதம் என இறுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக வாக்களித்திருக்கும் 4,57,76,311 வாக்காளர்களில் 2,31,71,736 பெண்கள். 2,26,03,156 பேர் ஆண்கள். மூன்றாம் பாலினத்தவர் 1,419. அதாவது, வாக்களித்த ஆண் வாக்காளர்களை ஒப்பிட, பெண்களின் வாக்குகள் 5,68,580 அதிகம். இது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் மிக முக்கியமான தருணமாகப் பார்க்கப்படுகிறது.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் பணப்பட்டுவாடா புகார்கள் எழுந்த நிலையில், 232 தொகுதிகளுக்கு மட்டும் மே 16-ல் வாக்குப்பதிவு நடந்தது. அப்போது 232 தொகுதிகளில் மொத்தம் 74.81 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில் ஆண் வாக்காளர்கள் 74.15 சதவீதம். பெண்கள் 74.33 சதவீதம்.

x