தமிழகத்தில் எப்படி நடந்தது தேர்தல்... திராவிட சுப.வீயும் பாஜக நாராயணனும் ஒப்பிடுகிறார்கள்


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

நாடே ஆச்சரியப்படும் அளவுக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. “இது வழக்கமான தேர்தல் அல்ல” என்று சொன்னவர்கள், வாக்குப்பதிவு முடிந்துள்ள சூழலில் தேர்தல் குறித்து என்ன சொல்கிறார்கள் என்று கேட்க வேண்டியது நம் கடமையல்லவா? திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஆகியோரிடம் ஒரே கேள்வியை முன்வைத்தேன். அவர்களது பதில்கள் இங்கே...

இந்தத் தேர்தல் எப்படியான சூழலில் நடந்தது. களம் எப்படியிருந்தது?

சுப.வீ: என் பார்வையில் இந்தத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. எப்போதும் இரண்டு கட்சிகளுக்கு இடையில் தேர்தல் நடக்கும். ஆனால், இந்தத் தேர்தல் எதிரில் ஒரு கட்சி நின்றது, அதற்குப் பின்னால் இன்னொரு கட்சி இருந்து இயக்கியது. இது கட்சிகளுக்கு இடையிலான தேர்தலாக இல்லாமல், இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான தேர்தலாக நடந்தது என்பது என்னுடைய கருத்து. திராவிட இயக்கத்துக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கும் இடையிலான மோதலாகவே இதனை நான் பார்க்கிறேன்.

x