டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in
தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களில், சென்னை வாக்குப்பதிவு நிலவரத்தைப் பற்றி ஓர் ஆதங்க நிலைத்தகவல் ஃபேஸ்புக்கில் படிக்கக் கிடைத்தது.
“அரசியல்வாதிகளும் அரசும் எந்தப் புதிய திட்டத்தையும், வளர்ச்சித் திட்டங்களையும், தொழிற்சாலையையும் கொண்டு வந்தாலும், சென்னை மற்றும் சென்னை யைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் கொண்டுவருகிறார்கள். சலுகைகளையும் திட்டங்களையும் மட்டும் சென்னை மக்கள் பெற்றுக்கொள்வார்கள். ஆனால், தேர்தல், வாக்குப்பதிவு என்று வந்தால் மட்டும் அவர்களுக்கு அலர்ஜி. வீட்டைவிட்டு வெளியே வரமாட்டார்கள். வெளியே வந்தாலும் வாக்களிக்க மாட்டார்கள்” எனும் புலம்பல் அந்தப் பதிவில் வெளிப்பட்டது.
இந்த முறை சென்னையில் குறைவான வாக்குகள் பதிவானது குறித்து, சென்னைக்கு வெளியே உள்ளவர்களின் ஓர் உதாரண உள்ளக் குமுறல்தான் இது. சென்னையில் வாக்குப்பதிவு குறைய என்னதான் காரணம்?