செல்வாக்கு நிலைக்குமா... சேதாரம் நிகழுமா?- செங்கோட்டையன் தொகுதி நிலவரம்


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

தாராளமாய் செலவழிப்பவரைப் பார்த்தால், ‘பணத்தைத் தண்ணியாய் செலவு செய்கிறாரே’ என்று சொல்வார்கள். குவியல், குவியலாய் பணமே பவானி ஆற்றில் செல்ல, பொதுமக்கள் அவற்றை அள்ளிச் சென்ற காட்சி அரங்கேறிய ஊர் கோபிச்செட்டிப்பாளையம்.

1996-ல் அதிமுக ஆட்சி அகன்று, திமுக ஆட்சி வந்த பின்பு ஜெயலலிதா உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தவர்கள், துணி துவைத்துக்கொண்டிருந்தவர்கள், கரையோரம் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் அன்றைக்கு நல்ல பண வேட்டை. 

“முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் ரெய்டு. அதிகாரிகளிடம் சிக்காதிருக்கத்தான் மூட்டை மூட்டையாய் பணத்தை ஆற்றில் இறைத்து விட்டார்கள்” என்று அன்று ஊரே பேசியது.

x