கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
சிவகங்கை சீமை திமுகவின் இன்றைய முகம், முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன். திருப்பத்தூர் தொகுதியில் முதல்முறையாக 2006-ல் வென்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த இவர், அதன் பிறகும் தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் அதே தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி தந்தவர். நான்காவது முறையாக மீண்டும் அமைச்சர் கனவோடு களத்தில் நிற்கிறார் பெரியகருப்பன். வாய்ப்பு எப்படியிருக்கிறது?
தேர்தல் களம்
சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பத்தூர் தொகுதி, முழுக்க முழுக்க கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. இங்கு யாதவர், முக்குலத்தோர், வல்லம்பர், முத்தரையர் போன்ற சமூகங்கள் பரவலாக வசிக்கிறார்கள். கொஞ்சம் மதச் சிறுபான்மையினரும் இருக்கின்றனர். இதுவரையில் நடந்துள்ள 14 தேர்தல்களில் 7 முறை வெற்றிபெற்று தொகுதியை தன்னுடைய கோட்டையாக தக்க வைத்திருக்கிறது திமுக.