கே.சோபியா
readers@kamadenu.in
அரசியலில் ஈடுபடுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். ராஜ.கண்ணப்பனுக்கு ஒரே லட்சியம்தான்... “அமைச்சராக வேண்டும்... அமைச்சராக வேண்டும்... அமைச்சராகியே தீர வேண்டும்” என்பதே அது.
கண்ணப்பனார் வரலாறு
1991-ல், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.கண்ணப்பன், 66 சதவீத ஓட்டுகளைப் பெற்று வென்று சாதனை படைத்தவர். அம்மா அமைச்சரவையில் பொதுப்பணி த்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் கோலோச்சிய கண்ணப்பனுக்கு, இடையில் மின்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையும் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.