பெண்களை இழிவுபடுத்துவதுதான் பெரியார் மண்ணின் குணமா?


ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கடைசி நேரப் பரப்புரையில் அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக இயங்கியதைப் பார்த்தோம். இதில் தங்களது கொள்கை பற்றியும், மக்களுக்கான வாக்குறுதிகளைப் பற்றியும் பேசுவதை விடுத்து பெரும்பாலோரின் பரப்புரை பெண்களைக் குறிவைத்தே நகர்ந்தது இந்தத் தேர்தலில் ஒரு கரும்புள்ளி என்றே சொல்லலாம்.

கண்ணியமற்ற வார்த்தைகள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் அவரது தாயாரையும் இழிவுபடுத்தும் விதமாகத் திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பி-யுமான ஆ.ராசா பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கும் முன்னதாகவே, திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி பெண்களை உருவக் கேலி செய்து கொச்சையாகப் பேசினார். இவை எல்லாவற்றையும்விட அருவருப்பான தொனியில் திமுக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின், முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி பெற்றது குறித்து சசிகலாவை முன்வைத்து கீழ்த்தரமாகப் பேசினார்.
சில தினங்களுக்கு முன்பு, கிணத்துக்கடவு தொகுதியில் பரப்புரையின்போது, “ஜெயலலிதா எங்களுக்கு அம்மா, மோடி எங்கள் அப்பா என்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. என்ன உறவுமுறை பாருங்கள்” என்று தயாநிதி மாறன் கண்ணியமற்று பேசினார்.

x