வாக்களிக்கும் வருங்காலத் தூண்களின் கவனத்திற்கு...


ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

தேர்தலில் மக்களை ஈர்க்க, அதிரடியான வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வெளியிடுவதும் தேர்தல் முடிந்ததும் அவற்றில் பெரும்பாலானவற்றை வசதியாக மறந்துவிடுவதும் வழக்கம்தான். அந்த வகையில் இந்த தேர்தல் களத்திலும் வாக்குறுதிகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இளம் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச 2ஜி டேட்டா, வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி, மாணவர் கல்விக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை அதிமுக வழங்கியிருக்கிறது. திமுகவோ கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டாவுடன் ‘டேப்லெட்’, கல்வி நிலையங்களில் ‘வைஃபை’ வசதி, முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது.

இத்தகைய இலவசங்களும் சலுகைகளும் உயர்கல்வி கற்கும் இளையோரைக் கவர உதவும் என்று அரசியல்வாதிகள் நம்புகின்றனர். இருப்பினும் “கணிசமான வாக்கு வங்கியாகத் திகழும் உயர்கல்வி மாணவர்களுக்கு இது மட்டும் போதாது. இளைஞர்களின் நலன் மீது உண்மையான அக்கறையுடன் எந்தக் கட்சியும் வாக்குறுதிகளை அளிக்கவில்லை” என்ற குற்றச்சாட்டு கல்வியாளர்கள் தரப்பிலிருந்து ஒலிக்கிறது.

அதேசமயம், இளம் தலைமுறையினர் தங்களது தேவைகளைக் குழுவாகவோ தனித்தோ பொதுவெளியில் விவாதித்ததாகவும் தெரியவில்லை. இந்நிலையில், இந்தத் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்யவிருக்கும் கல்லூரி பருவ மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றைப் பட்டியலிட்டிருக்கிறது தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம். தங்களது தொகுதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும்போது உயர்கல்வி மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய 14 அம்சங்கள் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன.

x