நேரு தான் வராரு... நல்லாத் தான் தாராரு!- திகு திகு திருச்சி மேற்கு தொகுதி


கரு.முத்து
muthu.k@kamadenu.in

ஆரம்பத்திலிருந்து ‘திருச்சி 2’ ஆக இருந்த இத்தொகுதி, மறுசீரமைப்பில் திருச்சி மேற்குத் தொகுதியாக மாறியது. ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என திருச்சியின் அத்தனை முக்கிய இடங்களும் இத்தொகுதிக்குள்தான் உள்ளன. எனவே, இத்தொகுதியைத் திருச்சியின் அடையாளமாகவே சொல்லலாம். இங்கு வெற்றிபெற்ற பலர், அமைச்சர் பதவியை அலங்கரித்திருக்கிறார்கள். அன்பில் தர்மலிங்கம், நல்லுசாமி, நேரு, மரியம்பிச்சை, பரஞ்சோதி என்று இங்கு வெற்றிபெற்று அமைச்சரானவர்களின் பட்டியல் நீளமானது. திமுகவும் அதிமுகவும் இங்கு கிட்டத்தட்ட சம எண்ணிக்கையில் வெற்றியைச் சுவைத்திருக்கின்றன.

நேருவின் வெற்றி - தோல்விகள்

திமுகவின் முதன்மைச் செயலாளரான கே.என்.நேரு மீண்டும் இங்கு வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். 2001 தேர்தல் வரை லால்குடியில்தான் நேரு போட்டியிட்டார். 1989-ல் அந்தத் தொகுதியில் முதல்முறையாக வெற்றிபெற்றவர், 1991 தேர்தலில் அதிமுகவிடம் தோற்றார். 1996 தேர்தலில் மீண்டும் வென்றவர், 2001-ல் திரும்பவும் வீழ்ந்தார். பின்னர் திருச்சி மாநகரை நோக்கி வந்தவர், 2006-ல் திருச்சி-2 ஆக இருந்த இந்தத் தொகுதியில் போட்டியிட்டார். வந்தவேகத்தில் வெற்றியைப் பரிசாகத் தந்தது இந்தத் தொகுதி. ஆனால், அடுத்த தேர்தலில் இந்தத் தொகுதியில் அதிமுகவின் மரியம்பிச்சையிடம் தோல்வியுற்றார். அமைச்சராகப் பதவியேற்கச் சென்ற மரியம்பிச்சை சாலை விபத்தில் உயிரிழந்ததையடுத்து, இடைத்தேர்தல் நடந்தது. அதிலும் அதிமுகவின் பரஞ்சோதியிடம் தோல்வியுற்றார் நேரு. ஆனாலும் அடுத்துவந்த 2016 தேர்தலில் அதிமுகவின் மனோகரனை வீழ்த்தி வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குச் சென்றார்.

x