வெற்றிமுகம் நோக்கி ஸ்டாலின்... வெற்றி விழா மூடில் கொளத்தூர்!


டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

இந்தத் தேர்தலில் எல்லோரின் பார்வையும் குவிந்திருக்கும் மிக முக்கியத் தொகுதி கொளத்தூர். திமுக தலைவர், திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்ற அந்தஸ்துடன் மு.க.ஸ்டாலின் களமிறங்கியுள்ள தொகுதி இது. சென்னை மாவட்டத்துக்குள் வரும் கொளத்தூரில் மூன்றாவது முறையாக ஸ்டாலின் போட்டியிட்டாலும், முதன் முறையாக முதல்வர் வேட்பாளர் என்ற அந்தஸ்துடன் அவர் போட்டியிடுவதுதான் இத்தொகுதி மீது பெரும் கவனத்தைக் குவித்திருக்கிறது.

ஆயிரம் விளக்கு டு கொளத்தூர்

1984 முதல் 2006 வரை, கருணாநிதியின் கோபாலபுரம் வீடு அமைந்திருக்கும் ஆயிரம் விளக்கு தொகுதியிலேயே களமிறங்கினார் ஸ்டாலின். 1984, 1991 என இரண்டு முறை அவருக்குத் தோல்வியைத் தந்த இத்தொகுதி, 2006 தேர்தலிலும் கவுரவமான வெற்றியைத் தந்துவிடவில்லை. மிகவும் போராடி 2,468 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதிமுக வேட்பாளரான ஆதிராஜாராமைத் தோற்கடித்தார் ஸ்டாலின். திமுக வெற்றிபெற்ற 1989, 1996 ஆகிய தேர்தல்களில் ஆயிரம் விளக்கில் பெரிய வெற்றியைப் பதிவுசெய்த ஸ்டாலினால், 2006 தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தபோதும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெல்ல முடிந்தது. இது அவருக்கும் திமுக தலைமைக்கும் அதிர்ச்சியை அளித்தது.

x