வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றத்துக்கான வாய்ப்புகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. தனது பரம வைரியான தென் கொரியாவும், முக்கிய எதிரியான அமெரிக்காவும் கூட்டு ராணுவப் பயிற்சிகளைத் தொடங்கியிருக்கும் நிலையில், இரு நாடுகளுக்கும் வட கொரியா கடும் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இந்த முறை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்குப் பதிலாக, அவரது தங்கை கிம் யோ ஜாங்கிடமிருந்து அந்த எச்சரிக்கை வெளியாகியிருக்கிறது.
“தென் கொரியாவுடன் இணைந்து ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்வதை அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அமெரிக்காவின் புதிய அரசு அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்றால், முதல் வேலையாக கொரிய தீபகற்பத்தில் துப்பாக்கி ரவைகளின் துர்நாற்றம் ஏற்படுத்துவதிலிருந்து விலகி நிற்க வேண்டும்” என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார் கிம் யோ ஜாங். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி ஜே பிளிங்கனும், பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டினும் இரண்டு நாள் பயணமாக தென் கொரியாவுக்கு வருவதற்கு முன்னர், ஜப்பானில் உயரதிகாரிகளைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் இந்த அறிக்கை வெளியாகியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
பின்னணி என்ன?