கரோனாவைச் சொல்லி தேர்தலை தள்ளிவைத்தால்..?- முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

திமுக வெற்றிபெறும் என்று கருத்துக் கணிப்புகள் சொன்னாலும், அதை முறியடிக்க அதிமுகவினரும், அவர்களைவிட மும்முரமாக பாஜகவினரும் களப்பணி செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், திருச்சுழி தொகுதியில் மீண்டும் களத்தில் நிற்கும் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் ஒரு பேட்டி.

 பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டீர்கள். எப்படியிருக்கிறது களம்?

களம் ரொம்ப நன்றாக இருக்கிறது. போகிற இடங்களில் எல்லாம் மக்கள் தானாகவே அருகில் வந்து, “இந்தவாட்டி உங்க ஆட்சிதான் சார்” என்கிறார்கள். ஓட்டுக்கேட்டுப் போகும் வேட்பாளர்களை வெறுமனே கும்பிட்டு, வழியனுப்பி வைத்தால் அவர்கள் சொல்ல வரும் விஷயம் வேறு. நெருங்கிவந்து வாழ்த்தினால், மக்கள் நல்ல முடிவெடுத்துவிட்டார்கள் என்று பொருள். 10 ஆண்டு கால மோசமான ஆட்சியில் இருந்து எப்போது விடுபடுவோமோ என்கிற ஆர்வமும், திமுக தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்கிற எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருக்கிறது.

x