உயரப் பறக்கும் உதயநிதியின் கொடி... தாத்தாவின் தொகுதியில் தடம்பதிக்கும் பேரன்!


டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

தாத்தா கருணாநிதி, 1996-லிருந்து தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றி அடித்த சேப்பாக்கம் தொகுதியைப் பேரன் உதயநிதி தேர்ந்தெடுத்திருப்பதில் வியப்பில்லை. இந்தத் தொகுதியில் கருணாநிதியைப் போல பேரன் உதயநிதியின் கொடி பறக்குமா?

ஜெட் வேக வளர்ச்சி

நடிகர் என்ற பிம்பத்தோடு 2019 மக்களவைத் தேர்தலில் பிரச்சாரக் களமிறக்கப்பட்ட உதயநிதி, ஜெட் வேகத்தில் கட்சிக்குள் முன்னேறத் தொடங்கினார். நேரடியாகவே இளைஞரணிச் செயலாளர், கட்சித் தலைவருக்கு இணையாக முக்கியத்துவம் என உதயநிதிக்கு திமுகவில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. தேர்தலில் உதயநிதி போட்டியிடுவாரா என்று கடந்த ஜனவரியில் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “திமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. நானே அப்படித்தான் கட்சியில் வாய்ப்பைப் பெற்றேன். திமுகவைக் குறை சொல்பவர்கள்தான் குடும்ப அரசியல், உதயநிதிக்கு முன்னுரிமை என்று சொல்லிவருகிறார்கள்” என்று படபடத்தார் ஸ்டாலின்.

x