கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
‘காலை ஜப்பானில் காபி; மாலை நியூயார்க்கில் கேபரே; இரவில் தாய்லாந்தில் ஜாலி!’ என்றொரு பாடலை ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படத்தில் பாடுவார் கமல்ஹாசன். அதே பாணியில், கோவை தெற்கு தொகுதி வேட்பாளராகத் தன்னை அறிவித்துக்கொண்ட வேகத்தில், கடந்த திங்களன்று மதியம் வேட்பு மனுதாக்கல், மாலையில் நிர்வாகிகள் சந்திப்பு, இரவில் பொதுக்கூட்டம், மறுநாள் காலையில் ரேஸ் கோர்ஸ் ஜாலி வாக்கிங், மக்கள் சந்திப்பு என பரபரப்பாக இயங்கி அனைவரையும் புருவமுயர்த்தச் செய்திருக்கிறார் கமல்.
இதையடுத்து, “எந்த வேட்பாளராயினும் திமுக கூட்டணிதான் ஜெயிக்கும்” என்று சொல்லிக்கொண்டிருந்த கோவை தெற்கு தொகுதி மக்கள், “திமுக கூட்டணி- மூன்றாம் இடம், அதிமுக கூட்டணி இரண்டாம் இடம், கமலே முதலிடம்” என மாற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலவரம் தேர்தல் களத்தில் இறுதிவரை நீடிக்குமா?
முக்கிய தொகுதி