யானை ஜெயமால்யதா எங்களுக்குச் சொந்தம்!- அரசுக்கு கடிதம் எழுதிய அசாம் வனத் துறை


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

யானைகள் நலவாழ்வு முகாமில், பாகன்களால் கோயில் யானை ஒன்று தாக்கப்பட்ட சம்பவம், தற்போது தேசம் தழுவிய பிரச்சினையாகியிருக்கிறது.

ஒப்பந்த அடிப்படையில் அந்த யானையைத் தமிழகக் கோயிலுக்குத் தந்திருந்த அசாம் வனத் துறை, அதைத் திரும்பத் தருமாறு கேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறது. அதேபோல, யானையை அடித்தவர்கள் மீது வன உயிரினப் பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அழுத்தம் தரத் தொடங்கியிருக்கிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றுவரும் கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானை ஜெயமால்யதா, அதன் பாகன்களால் சரமாரியாகத் தாக்கப்படும் காணொலிக் காட்சி, சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து, யானையைத் தாக்கிய இரு பாகன்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டனர்.

x