கட்சியை வளர்த்த எனக்கே தெரியாமல் கூட்டணியா?- கார்த்திக் மீது பாயும் கட்சியின் அமைப்புச் செயலாளர்


கே.சோபியா
readers@kamadenu.in

உலக அரசியல் வரலாற்றிலேயே தலைவர் ஒரு கட்சிக்கும், அவரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் இன்னொரு கட்சிக்கும் ஆதரவு கொடுத்த நிகழ்வு தங்கத் தமிழ்நாட்டில் தான் நடந்திருக்கிறது. அந்த மகத்தான சாதனைக்குச் சொந்தக்காரரான  ‘மனித உரிமை காக்கும் கட்சி’யின் தலைவர் நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கை (வழக்கம்போல) தொடர்பு கொள்ள முடியாததால், மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.துர்க்கைலிங்கத்தை லெட்டர் பேடில் இருந்த எண் வழியாகத் தொடர்பு கொண்டேன். இனி பேட்டி...

தலைவர் எடுத்த முடிவுக்கு மாறான முடிவை நீங்கள் எடுத்ததற்கு என்ன காரணம்?

மாறான முடிவுன்னு சொல்ல முடியாது. கட்சி சார்பில் 15 நாளா சென்னையில் முகாமிட்டுத் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருந்தது நான்தான். முக்குலத்தோர் சமுதாய மக்களின் முழு ஆதரவோடு இயங்குகிற இந்தக் கட்சிக்கு ஜெயலலிதா சீட் தராம ஏமாத்துனதுல இருந்து, அதிமுக தொடர்ந்து எங்களைப் புறக்கணித்து வருகிறது. இருந்தாலும் கூட கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து, ஒரே ஒரு சீட் கேட்டோம்.  “இப்ப ஆதரவு மட்டும் கொடுங்க, சட்டசபை தேர்தல் வர்றப்ப 2 சீட் தாரோம்”னு சொன்னாங்க. அதை நம்பி நாங்க பிரச்சாரத்துக்கு எல்லாம் போனோம்.

x