தவித்துப் போன தமிமுன் அன்சாரி!
மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, கடந்த முறை அதிமுக கூட்டணியில் நாகப்பட்டினத்தில் இரட்டை இலையில் போட்டியிட்டு வென்றார். இம்முறை அவருக்கு கேட்டை இழுத்துப் பூட்டிவிட்டது அதிமுக. இதனால் அறிவாலயத்தின் கதவைத் தட்டினார். அங்கேயும், “சீட் காலியில்லையே” என கைவிரிக்கப்பட்டதால், “சீட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை... குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களது ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று சொன்னாராம் அன்சாரி. அதற்கு அந்தத் தரப்பில் என்ன சொன்னார்களோ தெரியவில்லை. ஆனால், “எங்களின் 5 அம்ச கோரிக்கையை ஏற்றுக் கொண்டதால், திமுக கூட்டணியை ஆதரிக்க முடிவெடுத்திருக்கிறோம்” என்று அறிக்கை விட்டிருக்கிறார் அன்சாரி.
எங்களுக்கும் இல்ல... அவங்களுக்கும் இல்ல!