சொன்னாங்களே... செய்தார்களா?


தொகுப்பு: ஜெ.சரவணன்

கடந்த வாரம், இணையத்தில் அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயமாக கழகங்களின் தேர்தல் சலுகைகள் இருந்தன. குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று திமுக அறிவித்ததும் பாஜக தலைவர் எல். முருகன், “அது சாத்தியமில்லாத திட்டம்” என்றார். இப்போது அதிமுக 1,500 ரூபாய் அறிவித்திருக்கிறது. இதற்கு என்ன சொல்வார் என்று கேட்கலாம். கேட்டாலும் எதுவும் சொல்ல மாட்டார். ஏனென்றால் டிசைன் அப்படி. இதில் திட்டம் கசிந்துவிட்டது என்று வேறு சிரித்தபடி சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. ‘எங்கள் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் பிரதியெடுத்துக் கொண்ட கழகம் எங்கள் நேர்மையையும், தூய்மையையும் கைக்கொண்டால் மகிழ்வேன்.’ என்று ஒருபடி மேலே போய்விட்டார் கமல். ஏற்கெனவே கடன், இதில் 6 சிலிண்டர் இலவசம் என்று அறிக்கை விடும் அதிமுகவை மீம்ஸ்களாலும் பஞ்ச்களாலும் பதம் பார்க்கிறார்கள் நெட்டிசன்கள். குடும்ப அட்டைக்கு இலவச செல்போன், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை இப்படி ஏற்கெனவே அறிவிச்ச அறிவிப்புகளையெல்லாம் நிறைவேற்றிவிட்டீர்களா? என்றும் துளைக்கிறார்கள் நெட்டிசன்கள்.

குகையை விட்டு சிங்கம் வெளியே வந்துவிட்டது இனி வேட்டை ஆரம்பம்.- விஜயபிரபாகரன்

விஜயகாந்த் : டேய்... சும்மாருடா... - கடைநிலை ஊழியன்

x