களத்தில் தினகரன்... கலக்கத்தில் கடம்பூர் ராஜூ!- கோவில்பட்டி தொகுதி நிலவரம்


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

தேனீ போல் சுறுசுறுப்பானவர் என தொகுதிக்குள் பெயர் எடுத்தவர் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ. குறிப்பிட்டுச் சொல்லும்படி சில திட்டங்களை தொகுதிக்குள் கொண்டு வந்திருக்கிறார். இருந்தும், தொகுதிக்குள் வலுவாக இருக்கும் தேவர் சமூக வாக்குகள் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதும், அமமுக வேட்பாளராக டிடிவி தினகரனே இங்கு களம் இறங்குவதும் கடம்பூர் ராஜூவை கதிகலங்க வைத்திருக்கிறது.

கோவில்பட்டி தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் சி.பி.ஐ 7 முறையும், காங்கிரஸ் ஒருமுறையும், அதிமுக 4 முறையும் வென்றுள்ளன. தொடர்ந்து அதிமுக ஹாட்ரிக் வெற்றிபெற்றுள்ள இந்தத் தொகுதியில் திமுக ஒருமுறைகூட ஜெயித்தது இல்லை. இந்த முறையும் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு தொகுதியை தாரைவார்த்துவிட்டு ஒதுங்கிக்கொண்டது.

இங்கே 2011-ல் முதன்முதலாக போட்டியிட்டு வெற்றிபெற்றார் கடம்பூர் ராஜூ. அப்போது தென்மாவட்டங்களில் அமைப்புரீதியாக பலமே இல்லாத பாமக இவரை எதிர்த்துக் களம் இறங்கியது. இதனால் 26,480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கடம்பூர் ராஜூவுக்கு கடந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், திமுகவின் சுப்பிரணியனை விட வெறும் 428 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றார். கடம்பூர் ராஜூவின் சொந்தச் சமூகமான நாயக்கர் சமூக வாக்குகளே அவருக்கு கடந்த தேர்தலில் முழுமையாகக் கைகொடுத்தன.

x