ஹாட்ரிக் வெற்றி தருமா விராலிமலை?- விஜயபாஸ்கர் தொகுதி நிலவரம்


கரு.முத்து
muthu.k@kamadenu.in

இந்தத் தேர்தலில் அதிமுக வெல்லக்கூடிய தொகுதிகள் என்று பட்டியலிட்டால், அதில் விராலிமலை நிச்சயம் இடம்பிடிக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்தத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியான சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அந்த அளவுக்குத் தொகுதிக்குள் நல்ல பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கிறார்.

ஹாட்ரிக் அடிப்பாரா?

தொகுதி சீரமைப்பில் இலுப்பூர் தாலுகா முழுவதையும், குளத்தூர், மணப்பாறை தாலுகாக்களின் பகுதிகளையும் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி விராலிமலை. இதுவரை இரண்டு முறை சட்டப்பேரவைத் தேர்தலை இத்தொகுதி சந்தித்திருக்கிறது. இரண்டு முறையும் வெற்றிபெற்றவர் விஜயபாஸ்கர்தான். இப்போது மூன்றாவது முறையாகவும் இதே தொகுதியில் அவர் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த நெவளிநாதன் உள்ளிட்ட சிலர் சீட் கேட்டிருந்தாலும் விஜயபாஸ்கரே இங்கு வேட்பாளர் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

x