கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் சீர்மரபினர் பட்டியலைச் சேர்ந்த 68 சமூகத்தினர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்நிலையில், சீர்மரபினரில் ஒரு பிரிவான பிரமலைக் கள்ளர்களுக்காக பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் பெயரில் இயக்கம் நடத்திவரும் அதன் தலைவர் செல்வப்ரீத்தாவிடம் காமதேனுவுக்காக உரையாடினோம். இனி பேட்டி...
வன்னியர் இடஒதுக்கீட்டை இவ்வளவு தீவிரமாக எதிர்ப்பதேன்?
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் 116 சாதிகளில் ஒரே ஒரு சாதிக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டைக் கொடுத்துவிட்டு, எஞ்சிய 115 சாதிகளுக்கும் சேர்த்து வெறும் 9.5 சதம் ஒதுக்கீடு கொடுத்தால் எப்படிஏற்க முடியும்? அதுவும் மக்களிடமோ, எங்கள் அமைப்பு களிடமோ எந்தக் கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக வடக்கே ஒரு சாதியின் ஓட்டை வாங்குவதற்காக, தெற்கே பெரும்பான்மையாக வாழும் மக்களின் வாழ்வையே சீரழித்த இந்த நடிவடிக்கையை எதிர்க்காமல் என்ன செய்வது?