சமயம் வளர்த்த சான்றோர் 12: திருமூலர்


கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து உரைக்கப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரான திருமூல நாயனார், பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்...’, ‘அன்பே சிவம்‘, ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற சொற்றொடர்கள் மூலம் அனைவரும் ஒன்றே என்ற கோட்பாட்டையும், அன்பு நெறியே சிறந்தது என்ற கருத்தையும் உலகுக்கு உணர்த்தி, சைவநெறியை தழைத்தோங்கச் செய்தவர் திருமூலர். 

பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ள திருமந்திரத்தை அருளிய திருமூல நாயனார் வாழ்ந்த காலம், கிமு 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று அறியப்படுகிறது. 

கயிலை மலையில், சிவபெருமானின் காவலராக விளங்கிய நந்திதேவரின் அருள்பெற்ற மாணாக்கராக சிவயோகியார் ஒருவர் விளங்கினார். அவர் அணிமா முதலிய எண்வகை சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப் பெற்றவர். ஒருசமயம், அவர் அகத்திய முனிவருடன் தங்கும்பொருட்டு, முனிவர் எழுந்தருளிய பொதிய மலைக்குச் செல்ல விரும்பினார். அதன்படி தென் திசையை நோக்கிப் பயணம் மேற்கொண்டார். 

x