தேர்தல் பிரச்சார நாடகம் நடத்தும் ஸ்டாலின்!- தமாகா ‘விடியல்’ சேகர் விளாசல்


கே.சோபியா
readers@kamadenu.in

தமாகா துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகனின் மறைவுக்குப் பிறகு, பொதுச் செயலாளர் விடியல் எஸ்.சேகரின் தோள்களில் கூடுதல் பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. தொடர் தோல்வியில் இருந்து கட்சியைத் தூக்கி நிமிர்த்துவதற்காக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவரும் அவரை அலைபேசி வழியே தொடர்பு கொண்டேன். அந்த உரையாடலில் இருந்து...

தேர்தல் நெருங்கிவிட்டது. தமாகா என்ன செய்து கொண்டிருக்கிறது?

தமாகா, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்வதாக அறிவித்து, தேர்தல் பணிகளையும் தொடங்கி வைத்திருக்கிறார் தலைவர் ஜி.கே.வாசன். தமிழகத்தை தெற்கு, மேற்கு, சென்னை, மத்தி என்று நான்கு மண்டலங்களாகப் பிரித்து முதல்கட்ட தேர்தல் பணிகளைத் தொடங்கியிருக்கிறார். அடுத்ததாக, துணை அமைப்புகளின் பணிகளையும் மண்டல வாரியாக முடுக்கிவிட்டுள்ளோம். அதன்படி மாணவரணியின் முதல் கூட்டம் திருநெல்வேலியிலும், அடுத்தடுத்த கூட்டங்கள் மதுரை, திருப்பூர், கடலூர், கும்பகோணம் ஆகிய ஊர்களில் நடந்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து மார்ச் 3-ல் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் வாசன் தலைமையில் நடக்கிறது. இளைஞரணி சார்பில் தனியாக தேர்தல் பணிக்குழு அமைக்கப் போகிறோம். அவர்கள் தெருமுனைப் பிரச்சாரம், இருசக்கர வாகன யாத்திரை என்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்குவார்கள்.

x