கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
ஒரு காலத்தில் தேசியவாதத்துக்காக வாதாடிய பீட்டர் அல்போன்ஸின் குரல், இப்போது மாநில உரிமைகளுக்காக திமுகவைக் காட்டிலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. தனது நீண்ட அனுபவம், வாசிப்பில் இருந்து இவர் சொல்லும் யோசனைகள் பலவற்றை காங்கிரஸ் கட்சி ஏற்பதில்லை என்றாலும் தொடர்ந்து பேசிவரும் அவருடன் ஒரு உரையாடல்.
ராகுல் காந்தி வருகை தமிழகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
அவரது வருகை அவருக்கும் தமிழ் மக்களுக்கும் உள்ள ஈர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறது. கூடவே, தமிழ் மக்களுக்கு அவர் மீது இருக்கிற அளவு கடந்த அன்பும், பரிவும் வெளிப்படுவதையும் காண முடிகிறது. அவர் மக்களைச் சந்திக்கும்போது அந்த மக்களுடன் மக்களாகவே தன்னைக் கரைத்துக் கொள்கிறார். He dessolved. புதுவையில் கல்லூரி மாணவிகள் மத்தியில் பேசும்போது, பல மாணவிகள் கண்களில் கண்ணீர் தளும்பி நின்றதை நான் பார்த்தேன்.