புலம்ப வைத்த பெட்ரோல்!


கடந்த ஒரு மாத காலமாகவே பெட்ரோல் - டீசல் விலை எகிறி வருகிறது. பெட்ரோல் கிட்டத்தட்ட லிட்டர் நூறு ரூபாயைத் துரத்திக்கொண்டிருக்கிறது. டீசல் விலை பெட்ரோல் விலையைத் துரத்திக் கொண்டிருக்கிறது. கரோனா காலத்தில், கச்சா எண்ணெய் விலை கண்டபடிக்கு சரிந்தும் இங்கு பெட்ரோல் டீசல் விலை எகிறிக் கொண்டே இருக்கிறது. கரோனா தொற்றுக்குப் பயந்து, பொதுப் போக்குவரத்துகளைக் குறைத்து சொந்த வாகனம் வாங்க ஆரம்பித்த மக்கள், இப்போது பெட்ரோல் விலை உயர்வுக்குப் பயந்து மீண்டும் பொதுப் போக்குவரத்தை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இணையத்தில் பெட்ரோல் விலை உயர்வு குறித்த புலம்பல்களைப் பரவலாகப் பார்க்க முடிகிறது. ‘பெட்ரோல் விலை, கியாஸ் விலை, எதைத் தொட்டாலும் விலையேற்றம், ஆனால், வருமானம் மட்டும் ஏறவே இல்லை. கடந்த அஞ்சு வருஷமா இதுதான் நிலைமை. வாங்கும் சம்பளத்தை பேங்க்ல போடறதுக்கு முன்னாடி பெட்ரோல் பங்க்லேயே காலியாயிடும் போல’ என்று ஒருபக்கம் புலம்ப, ‘ஒளவையாரின், வரப்பு உயர நீர் உயரும் பாடலை மோடி பாடியபோதே டவுட்டு வந்தது. உயரும் உயரும்னு பேசும்போதே தெரியும் இப்டி எதாவது உயரும்’னு என்று கலாய்த்துக் கொட்டினார்கள் நெட்டிசன்கள்.

ஒரு எம்பி, எம்எல்ஏ கூட தராத தமிழ்நாட்டுக்கு மோடி எவ்வளவோ செய்துள்ளார். அப்புறம் ஏன் ‘கோ பேக் மோடி’ சொல்லவேண்டும்? - குஷ்பு

போன தடவை நீங்களும்தான் சொன்னீங்க மேடம். மறந்துட்டீங்களா?!- ரஹீம் கஸாலி

2009-ல் சிவகங்கை மக்களவை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும். - சென்னை உயர்நீதிமன்றம்

x