வெற்றி நடைபோடும் விளம்பரமே..!- தேர்தல் கள தயாரிப்பில் திமுகவை மிஞ்சும் அதிமுக


கரு.முத்து
muthu.k@kamadenu.in

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஊருக்கு முதலாகப் பிரச்சாரத்தை ஆரம்பித்து உற்சாகமாகக் களமாடி வருகிறது திமுக. ஆனால், ஆரம்பத்தில் பல்வேறு குழப்பங்களில் சிக்கித் தவித்த அதிமுக, தாமதமாகவே களத்தில் குதித்தாலும் அதிரடியான திட்டங்களை அறிவிப்பது, கூட்டணிக் குழப்பத்தை தீர்ப்பதில் வேகம் காட்டுவது, விருப்ப மனுவுக்குத் தேதியை அறிவித்தது என அசுரப் பாய்ச்சலைக் காட்டிவருகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பே திமுக கூட்டணி இறுதிசெய்யப்பட்டுவிட்டது. மக்களவைத் தேர்தலில் தன்னுடன் இருந்த காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அத்தனைக் கட்சிகளையும் அப்படியே கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொண்டு தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறது திமுக. யாருக்கு எத்தனைத் தொகுதிகள் என்பதுதான் இதுவரை இறுதிசெய்யப்படாத சங்கதி. இப்போதே பேச்சுவார்த்தையை ஆரம்பித்தால் கூட்டணியில் குழப்பம் நேரலாம் என்று அஞ்சும் திமுக, தேர்தல் தேதி அறிவிப்புக்காகக் காத்திருக்கிறது. எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பதிலும் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு நிலவுவதாகச் சொல்லப்படுகிறது.

அமைதி காத்த அதிமுக

x