ரோகிணி
readers@kamadenu.in
கோவையில் காதலர்களின் வேடந்தாங்கல் எது என்று கேட்டால் யாவரும் சட்டென்று சொல்லிவிடும் இடம், தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகம். இதன் பொதுச் செயலாளரான கு.ராமகிருஷ்ணன், இந்த அலுவலகத்தில் மட்டும் இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட காதல் திருமணங்களை நடத்திவைத்து அசத்தியிருக்கிறார். ஆண்டுதோறும் காதலர் தினத்தன்று காதல் தம்பதியரை அழைத்து விருந்து வைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டுக்கான காதலர் தின நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துகொண்டிருந்தவரிடம் ஒரு பேட்டி:
எத்தனை வருடங்களாகக் காதல் ஜோடிகளுக்குத் திருமணம் நடத்திவைக்கிறீங்க?
25 வருடங்களாக இதைச் செய்றேன். ‘கலப்பு திருமணம் புரிந்தோர் நல சங்கம்’னு இதை ஒரு அமைப்பாகப் பதிவு செஞ்சு 20 வருடமாச்சு. மேடைகள்ல கலப்புத் திருமணம் நடத்திவைப்பதைத் தந்தை பெரியார்தான் ஆரம்பித்தார். அவர் கூட்டங்களில் அதை இயல்பா நடத்திக் கொடுப்பார். நாங்க அதுக்குன்னு ஒரு அமைப்பை உருவாக்கி நடத்தறோம்.