கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, திமுக சொத்துப் பாதுகாப்புக் குழுத் துணைத் தலைவராக உள்ளார். இவரது மகன் பைந்தமிழ்பாரி, திமுக இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளராக வலம் வருகிறார்.
1996-ல் கோவை சிங்காநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2006-ல் கோவை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்த காலத்தில், அமைச்சராகவும் பதவி வகித்த பொங்கலூரார், 2001-ல் சிங்காநல்லூர், 2011-ல் கோவை தெற்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 2014-ல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியிலும், 2019-ல் சூலூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தவர். தொடர்ந்து மூன்று முறை வெற்றி வாய்ப்பை இழந்ததால், இம்முறை இவருக்குப் பதிலாக இவரது மகனுக்கு சீட் கொடுக்க திமுக தலைமை திட்டமிடுவதாகக் கட்சி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. இதுகுறித்து பொங்கலூராரிடம் பேசியதிலிருந்து...
உங்களுக்குப் பதிலாக உங்கள் மகனுக்குத் தான் இம்முறை சீட் என்று பேசப்படுகிறதே?