அமமுகவை கலைத்துவிட்டு வந்து ஒற்றுமை பற்றி பேசுங்கள்!- சசிகலாவுக்கு வைகைச்செல்வன் அட்வைஸ்


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

‘சசிகலா ரிட்டர்ன்ஸுக்கு’ப் பிறகு மைக் பிடிக்கவோ, பேட்டி கொடுக்கவோ அமைச்சர்களே நடுநடுங்குகிறார்கள். பேட்டிப்புலிகள் என்று கலாய்க்கப்படும் ஜெயக்குமார், கே.டி.ஆர். கூட பேட்டிக்குத் தயங்குகிறார்கள். இந்தச் சூழலில், “எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள்” என்று ‘காமதேனு' பேட்டிக்கு முன்வந்தார், அதிமுக கொள்கைபரப்பு துணைச் செயலாளர் வைகைச் செல்வன்.

“எந்த நேரத்திலும் முதல்வர் அறைக்கே வந்து என்னைச் சந்திக்கலாம்... 100 நாட்களில் உங்கள் மனுக்கள் மீது தீர்வு காணப்படும்” என்றெல்லாம் பேசுகிறார் மு.க.ஸ்டாலின். திமுகவின் இந்த தன்னம்பிக்கை எதைக் காட்டுகிறது?

இது திமுகவின் தன்னம்பிக்கையை அல்ல, தடுமாற்றத்தையும், பேராசையையும் காட்டுகிறது. மு.க.ஸ்டாலினின் அறியாமையைக் காட்டுகிறது. ஒன்றரை வருடமாகியும், முரசொலி அலுவலகத்தின் மூலப்பத்திரத்தையே காட்ட முடியாதவர், மக்களின் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காண்பேன் என்று சொல்வது வேடிக்கையாகவும், விநோதமாகவும் இருக்கிறது.

x