கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
கரோனா பரவலுக்குப் பிறகு ஆங்கில முறை மருத்துவமான ‘அலோபதி’ தவிர்த்த பிற மருத்துவ முறைகளை அதிகமாக ஊக்குவித்துவரும் ஆயுஷ் அமைச்சகம், இப்போது ஆயுஷ் மருத்துவர்களையும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதித்துள்ளது. அதன்படி, ஆயுர்வேத, யுனானி, சித்த, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவர்களும் இனி அறுவை சிகிச்சை செய்யலாம்.இதற்கு எதிராக அலோபதி மருத்துவர்களும், ஆதரவாக ஆயுஷ் மருத்துவர்களும் கடும் விவாதத்தில் இறங்கியிருக்கிறார்கள். இந்திய மருத்துவ சங்கத்தினர் ‘மிக்ஸோபதி’ சிகிச்சைக்கு எதிராக பிப்ரவரி 1 முதல் 14-ம் தேதி வரை நாடு தழுவிய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில், இரு தரப்பினரிடமும் முக்கிய சந்தேகங்களை வினாக்களாக முன்வைத்தோம்.
தமிழ்நாட்டைப் பின்பற்றுவது நல்லது!
டாக்டர் கே.செந்தில் - தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர்
‘மிக்ஸோபதி’யை ஏன் எதிர்க்கிறீர்கள்?