இந்தியாவின் நம்பர் ஒன்!- பட்டயக் கணக்காளர் தேர்வில் பட்டையைக் கிளப்பிய இசக்கிராஜ்


சாதனா
readers@kamadenu.in

மிகவும் கடினமான படிப்புகளில் ஒன்றாக கருதப்படுவது ‘சிஏ’ எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்பு. ஆடிட்டர் ஆவதெல்லாம் கம்பசூத்திரம் என்றே பலர் அஞ்சுகின்றனர். அதையெல்லாம் தகர்த்தெறிந்து சிஏ தேர்வில் இந்திய அளவில் முதல் மாணவராக தேர்வாகி இருக்கிறார் இசக்கிராஜ்.

கர்னாடக சங்கீதத்தைப் போல, வழிவழியாய் வந்தவர்களுக்கே பட்டயக் கணக்காளர் ஆகும் அறிவும் தகுதியும் இருப்பதாக பொதுப்புத்தி நிலவுகிறது. சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரவாசிகளுக்குத்தான் இதுபோன்ற படிப்புகளுக்கான சிறப்புப் பயிற்சி கிட்டும் என்றும் நம்பப்படுகிறது. அதிலும் முதல் முயற்சியிலேயே சிஏ-வை வெல்வது என்பதெல்லாம் எளிதில் நடக்காது என நினைப்பவர்களும் உண்டு. இவற்றையெல்லாம் பொய்யாக்கி இருக்கிறார், சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த 23 வயதான இசக்கிராஜ்.

இந்திய பட்டயக் கணக்காளர் மையம் நடத்தும் அனைத்திந்திய அளவிலான சிஏ இறுதித் தேர்வில், இந்த ஆண்டு முதல் இடத்தை  பிடித்திருக்கிறார் இசக்கிராஜ். முதல் முயற்சியிலேயே 800-க்கு 553 மதிப்பெண்களைக் குவித்து இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். இதுகுறித்து காமதேனுவுக்காக இசக்கி ராஜூடன் உரையாடினோம்.

x