தமிழில் கிளாசிக் நாவல்கள் இல்லையா?- வண்ணநிலவன் பதிவால் வளரும் சர்ச்சை


ஜெய்
jeyakumar.r@hindutamil.co.in

தமிழ் நவீன இலக்கியம் குறித்த சர்ச்சை பல காலம் முன்பே தொடங்கிவிட்டது. மொழிபெயர்ப்பு இலக்கியம் தமிழுக்கு அறிமுகம் ஆகத் தொடங்கிய காலகட்டத்தில் தமிழ் விவரிப்பு மொழியே விமர்சனத்துக்கும் உள்ளானது. கல்கியின் கதைகள் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அயல் மொழி எழுத்தாளர்கள் பலரும் தமிழ் எழுத்தாளர்கள்போல் கொண்டாடப்பட்டனர். அதற்குச் சிறந்த உதாரணம், வைக்கம் முகம்மது பஷீர். அதேபோல், வங்கத்தில் விபூதிபூஷண் பந்தோபாத்யாய, தாராசங்கர் பானர்ஜி, ரஷ்ய இலக்கியத்தில் டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, சமீப காலத்தில் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் காப்ரியேல் கார்சியா மார்க்குவெஸ் எனப் பலரையும் உதாரணமாகச் சொல்லலாம்.

பாதிப்பை ஏற்படுத்திய படைப்புகள்

பிறகு, ‘தண்ணீர்’, ‘கோபல்ல கிராமம்’, ‘புத்தம் வீடு’, ‘புயலிலே ஒரு தோணி’, ‘அம்மா வந்தாள்’, ‘கம்பா நதி’, ‘விஷ்ணுபுரம்’, ‘யாமம்’, ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’, ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’, ‘காகித மலர்கள்’, ‘சாயாவனம்’, ‘வாசவேஸ்வரம்’, ‘பசித்த மானிடம்' போன்றவை போல் மாற்று மொழி நாவல்களான ‘அக்னி நதி’, ‘நீலகண்டப் பறவையைத் தேடி’, ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’, ‘பால்யகால சகி’, ‘நாலுகெட்டு’, ‘தோட்டியின் மகன்’, ‘புத்துயிர்ப்பு’, ‘போரும் அமைதியும்’, ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’, ‘ஆரோக்கிய நிகேதனம்’ எனப் பல நாவல்கள் தமிழ் வாசகர்களால் கொண்டாடப்பட்டன.

x