‘பத்மஸ்ரீ ’ ராமச்சந்திர புலவர் - தோல்பாவைக் கலைஞருக்கு கிடைத்த அங்கீகாரம்!


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

கேரளக் கோயில்களில் திருவிழாக் காலங்களில் தோல்பாவைக் கூத்துக்குப் பிரதான இடமுண்டு. அதிலும் பாலக்காடு ராமச்சந்திரப் புலவரின் தோல்பாவைக் கூத்து கேரளத்தில் ரொம்பவே பிரபலம். இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெறும் பட்டியலில் இவரும் இருக்கிறார். அறிவிப்பு வெளியானதிலிருந்தே வாழ்த்து மழையில் நனைந்துவரும் ராமச்சந்திரப் புலவரிடம் ‘காமதேனு’வுக்காகப் பேசினோம்.

பூர்விகம் தமிழகம்

“13 தலைமுறைகளாக எங்கள் குடும்பம் தோல்பாவைக் கூத்துக் கலையில் இருக்கிறது. தமிழகம்தான் எங்களது பூர்விகம். இந்தக் கூத்துக்காகவே கோவை பகுதியிலிருந்து எனது குடும்பத்தினர் இங்கு இடம்பெயர்ந்தனர்” என்று பெருமிதத்துடன் பேசத் தொடங்கினார் ராமச்சந்திரப் புலவர்.

x