பலனளிக்குமா பாமகவின் தேர்தல் கணக்கு?- அதிமுகவுக்கு ராமதாஸ் கொடுக்கும் அழுத்தங்கள்


டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டே தேர்தல் கூட்டணி தொடர்பாகப் பேச மறுப்பது, திமுகவுடன் கூட்டணிக்கு முயற்சி, தனித்துப் போட்டி என்று பாமகவைப் பற்றி வெளியகும் தகவல்கள் தேர்தல் களத்தைப் பரபரப்பாக்கி விட்டிருக்கின்றன. பாமக முகாமில் என்னதான் நடக்கிறது?

பலமும் பலவீனமும்

கடந்த சட்டமன்றத் தேர்தலில், 'மாற்றம், முன்னேற்றம், அன்புமணி!’ எனும் கோஷத்துடன் பாமக தேர்தல் களம் கண்டது. ‘முதல் நாள் முதல் கையெழுத்து’ என்ற எதிர்பார்ப்போடு அதிர்வலைகளை ஏற்படுத்த அன்புமணியும் தீயாய் உழைத்தார். ஆனால், அதெல்லாம் கானல் நீரானது. தேர்தலில் தோற்றாலும் பாமகவுக்கு என கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. அதை மதித்துத்தான் தங்களை கடுமையாக விமர்சித்த போதும் பாமகவை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனது கூட்டணிக்குள் கொண்டு வந்தது. பாமக கேட்ட தொகுதிகளையும் அன்புமணிக்காக ஒரு மாநிலங்களவைத் தொகுதியையும் தூக்கிக் கொடுத்தது. என்றாலும், தேர்தல் முடிவுகள் பாமகவுக்குப் பாதகமாகவே அமைந்தன. அன்புமணியால் கூட கரையேறமுடியவில்லை.

x