பட்ஜெட்டுக்கு முன் வழக்கமாக அல்வா கிண்டு வார்கள். ஆனால், இந்த பட்ஜெட்டையே சமூக வலைதளத்தில் அல்வா கணக்காய் கிண்டிவிட்டார்கள் நெட்டிசன்கள். 'நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை, சாரி ஓஎல்எக்ஸ் உரையை வாசிக்க ஆரம்பித்தார்' என்று தொடங்கி, கிரிக்கெட் வெற்றியை எல்லாம் பட்ஜெட் உரையில் சொல்வது இதுதான் முதல்முறை என்று வரலாறையும் தோண்டி, 'பட், பட் என்று எல்லாத்தையும் ஜெட் வேகத்தில் விற்பதால்தான் பட்ஜெட் என்று பெயர் வைத்திருப்பார்கள் போல...' என்று கூறியதோடு, 'நல்லவேளை பழக்கதோஷத்தில் தனியார் நிறுவனங்களை தனியார் மயமாக்குவோம்னு பட்ஜெட்ல சொல்லல. இவங்க போட்டி போட்டு விக்கிறத பார்த்தா சீனாக்காரன் ஆக்கிரமிப்பு பண்ணின மாதிரி தெரியல ஃப்ளாட் வாங்கி தான் கட்டி இருக்கிறான் போல..?!' என்பது வரை பிரித்து மேய்ந்துவிட்டார்கள்.
*********************************************
சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது.- ராதிகா சரத்குமார்
இதைக் கேட்டு சிரிக்காதவர்கள் வேற எதைக் கேட்டும் சிரிக்க மாட்டார்கள்!- மெத்தவீட்டான்