கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
உடலில் பற்றியெரியும் நெருப்புடன் வேதனையில் பிளிறியபடி ஓடும் யானையின் காணொலியைக் கண்ணில் நீர்த் திரை மறைக்காமல் யாராலும் பார்த்துவிட முடியாது. முதுமலை அருகில் உள்ள மசினகுடியில் தனது கடைசி மூச்சைவிட்ட யானையின் மரணம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது.
உண்மையில், யானை அடக்கம் செய்யப்பட்ட பின்னர்தான், அதன் உடல் மீது நெருப்பு வைக்கப்பட்ட காட்சி அடங்கிய காணொலி வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக பிரசாத் (36), ரேமண்ட் டீன் (28) ஆகிய இருவரை வனத் துறை கைது செய்திருக்கும் நிலையில், இந்த அவலச் சம்பவம் நிகழ்வதற்கு வனத் துறையினரின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என்று வன உயிர் ஆர்வலர்கள் புகார் கூறுகிறார்கள். யானை இறந்து புதைக்கப்பட்ட பின்பு, காணொலி வெளியிடப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதுதான் வன உயிர் ஆர்வலர்களின் குற்றச்சாட்டு!
என்னதான் நடக்கிறது இந்த விஷயத்தில்?