பத்ம விருதுகளால் பட்டை தீட்டிய வைரங்கள்!


ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசால் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏழு பேருக்கு பத்ம விபூஷண் விருது, 10 பேருக்கு பத்ம பூஷண் விருது, 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

‘மேக் வித்’ தமிழர் என உரக்கச் சொல்பவர்!

சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையான தரத்தில் 50-க்கும் மேற்பட்ட மென்பொருட்களைத் தயாரித்துள்ளது ஜோஹோ கார்ப் நிறுவனம். தென்காசி மத்தளம்பாறையிலும் சென்னையிலும் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட 8 நாடுகளில் தலங்களைக் கொண்டு தற்போது கம்பீரமாக இயங்கி வருகிறது. இவற்றில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களில் பலரிடம் பட்டம் கிடையாது. ஆனால், தொழில்நுட்ப பட்டறிவில் பட்டைத் தீட்டப்பட்டவர்கள்.

x