ஹாட் லீக்ஸ்- தமிழுக்காக தமிழகம் வருவாரா பிரதமர்?


சென்னை பெரும்பாக்கத்தில் 24.5 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி அதீத ஆர்வமாய் இருக்கிறாராம். இதற்காக ஏற்பாடாகும் விழாவில் திருக்குறள் உள்ளிட்ட சில தமிழ் நூல்களின் மொழிபெயர்ப்புகளையும் பிரதமர் மோடி கையால் வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது. என்றாலும் இந்த விழாவுக்காக பிரதமர் நேரில் சென்னைக்கு விஜயம் செய்வாரா அல்லது டெல்லி
யில் இருந்தபடியே காணொலி வழியே தமிழ் கதைப்பாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. எனினும் “இது தேர்தல் நேரம் என்பதால் விழாவில் மோடிஜி நேரில் கலந்துகொண்டு வழக்கம் போல தமிழில் ரெண்டொரு வார்த்தைகளை பேசி அசத்த வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது” என்கிறது தமிழக பாஜக வட்டாராம்.

தஞ்சையை தட்டிப் பறிக்கிறதா தாமரை?

தஞ்சை வருவாய் மாவட்டத்தில் மொத்தம் எட்டு சட்டமன்றத் தொகுதிகள். இதில் ஒரத்தநாட்டையும் தஞ்சை தொகுதியையும் அதிமுக எப்போதும் கூட்டணிக் கட்சிக்குக் கொடுத்ததில்லை. இந்தத் தொகுதிகளில் அதிமுகவே நேரடியாக களமிறங்கும். ஆனால், இந்த முறை அதிமுகவை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் பாஜக தஞ்சைத் தொகுதியை தனக்காக கேட்கிறதாம் பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தத்துக்காக இந்த கரிசனமாம். இதையறிந்து தஞ்சை அதிமுகவினர் கொதித்துப் போய்க்கிடக்கிறார்கள். ஆனால், இதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தஞ்சை சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தை கடந்த வெள்ளிக்கிழமை அட்டகாசமாக திறந்துவைத்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார் கருப்பு முருகானந்தம்.

கரூர் திமுகவை கலைக்கும் அதிமுக!

x