கரு.முத்து
muthu.k@kamadenu.in
தமிழக அரசியலிலும் அதிகார மாற்றங்களிலும் கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக மருத்துவமனைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. அரசியல் வியூகங்கள், மறைமுக பேரங்கள் எனப் பல்வேறு விவகாரங்கள் மருத்துவ மனைகளின் மர்ம நிழல்களில் மறைந்து கிடக்கின்றன.
அண்ணா காலத்திலிருந்தே அரசியல் தலைவர்களின் உடல்நிலை தொடர்பான பிரச்சினைகள்தான் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு வழிவகுத்தன. 1968-ல் அண்ணாவுக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பியவர், தொடர்ந்து உடல்நலப் பாதிப்புடனேயே இருந்தார். அமெரிக்காவில் அண்ணாவுக்குச் சிகிச்சை அளித்த டாக்டர் மில்லர் வரவழைக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 1969 பிப்ரவரி 3-ல் அண்ணா மறைந்தார். அதன் பிறகு நடந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக கருணாநிதி வசம் வந்தது முதல்வர் பதவி.
அடுத்தது எம்ஜிஆர்