தேர்தல் அறிக்கையில் கல்விக்கு முக்கியத்துவம்!- கட்சிகளை வலியுறுத்தும் கல்வி பாதுகாப்பு இயக்கம்


ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

"மனிதனை மனிதன் விழுங்கும் போட்டி உலகத்துக்குக் குழந்தைகள் பலியிடப்படுவது இன்னும் அதிகரிக்கப் போகிறது. இந்தியக் குழந்தைகளின் குழந்தைப் பருவமே பலியிடப்படப் போகிறது. நம் பண்டைய ஏற்றத் தாழ்வுகளும், நவீன ஏற்றத் தாழ்வுகளும் இன்னும் தீவிரமடையப் போகின்றன” - இப்படி எச்சரிக்கிறது, ‘கல்வி காப்போம் தேசம் காப்போம்’ என்ற தலைப்பில் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் அண்மையில் வெளியிட்டுள்ள ‘கல்விக்கான கொள்கை அறிக்கை 2021’ என்ற புத்தகம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்களை உள்ளடக்கியது பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம். தற்போது இவர்களால் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தில் கல்வி தொடர்பாக நிலவும் பிரச்சினைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் அலசி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே தயாரிக்கப்பட்டு அனைத்து கட்சிகளிடமும் ஒப்படைக்கப்பட்ட  அறிக்கையைச் சுருக்கி புத்தகமாக்கி இருக்கிறார்கள். அத்துடன்  ‘தேசிய கல்விக் கொள்கை 2020’ தொடர்பான மதிப்பீடுகளையும், கரோனா காலம் கல்விப் புலத்துக்கு விடுத்திருக்கும் சவால்களையும் இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார்கள்.

x