என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
ரஜினியின் போர்ப்படைத் தளபதிகளில் முக்கியமானவராக இருந்தவர் தூத்துக்குடி ஜோசப் ஸ்டாலின். மக்கள் பிரச்சினைக்காக நேரடியாக ரஜினி களமிறங்கிய முதல் நிகழ்வு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்தான். அப்போது ரஜினியை வரவேற்று நாள் முழுவதும் அவருடன் துணை நின்றது, தூத்துக்குடி மக்கள் மன்றத்தின் செயலாளராக இருந்த ஜோசப் ஸ்டாலின்தான். பூத் கமிட்டி அமைப்பது, மன்றத்தைப் பலப்படுத்துவது என ரஜினிக்காகப் பரபரப்பாக ஓடிய ஸ்டாலின், அறிவாலயப் பிரவேசம் சென்றிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடன் ஒரு பேட்டி:
நீங்கள். திமுகவில் இணைந்ததும் உங்களிடம் ரஜினி ஏதாவது பேசினாரா?
ரஜினி சார் தனிப்பட்ட வகையில் போனில் கூப்பிட்டு, “நான் அரசியலுக்கு வரலைன்னு தெரிஞ்ச பின்னாடிதானே வேற அரசியல் இயக்கத்துக்குப் போறீங்க! நீங்க விருப்பப்பட்ட எந்தக் கட்சியில் சேர்ந்தாலும், சமூக சேவைகளைத் தொடர்ந்து செய்யுங்க”ன்னு என்கிட்ட சொன்னார். மன்றத்துல இருக்கிற மத்தவங்களும் எந்தக் கட்சியிலும் சேரலாம்னு அறிக்கை வெளியானது அதுக்கு அப்புறம்தான்!