தடுப்பூசிகள் தரும் நம்பிக்கை- விடைகொடுப்போம் பெருந்தொற்றுக்கு!


நிஷா
readers@kamadenu.in

உலகை அச்சுறுத்தும் கரோனாவை ஒருவழியாக வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் தொடங்கியிருக்கிறது இந்தப் புத்தாண்டு. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராசெனேகா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தயாரித்த ‘கோவிஷீல்டு' தடுப்பூசி, பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி ஆகியவற்றை அவசரகாலத் தேவைக்குப் பயன்படுத்த இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடங்கிவிட்டன. இதுதான் புதிய நம்பிக்கைக்கு வித்திட்டிருக்கிறது.

உலகளவில் எடுத்துக்கொண்டால், இப்போதைக்கு சுமார் 40 தடுப்பூசிகள் மருத்துவமனைப் பரிசோதனை நிலையில் உள்ளன. ரஷ்யாவின் தேசிய நோய்த்தொற்றியல், நுண்ணுயிரியல் ஆய்வு மையத்தால் உருவாக்கப்பட்ட ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ரஷ்ய அரசு அனுமதி வழங்கியது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம், மக்களின் பயன்பாட்டுக்காக முதல் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஃபைசர், பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பு மருந்தின் அவசரப் பயன்பாட்டுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பஹ்ரைன், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனேகா கரோனா தடுப்பூசி

x